February
7


மக்களால் மக்களுக்கு எனும் செயல்த்திட்டத்தினூடே யேர்மன் நம்பிக்கை ஒளியின் ஒழுங்கமைப்பில் யேர்மனி ஆன்ஸ்பேக் நகரத்தில் வசித்துவரும் செல்வன்.சிறீதரன் லவன் அவர்கள் தனது 18 வது பிறந்ததினத்தை முன்னிட்டு 16.07.2016 ல் இலக்கம் 54,ஸ்கந்தபுரம், கிளிநொச்சியில் வசித்துவரும் போரினால் பாதிப்புற்ற செல்வி.ச.ரசானா என்பவருக்கு கல்விக்கான கொடுப்பனவாக ரூபா ஐம்பதாயிரம்(50000,00) அன்பளிப்பாக நேரில் சென்று அவரது குடும்பத்தினருடன் இணைந்து வழங்கியுள்ளார்.

பாதிப்புற்ற உறவுகளுடனான இணைப்பை உதவிகள் நல்கும் குடும்பங்களுடன் ஏற்படுத்தும் செயல்த்திட்டத்தின் கீழ் செல்வன்.லவனின் குடும்பத்துடன் இணைப்புச் செய்யப்பட்ட செல்வி.ரசானாவின் குடும்பத்திற்கு 03.05.2014 அன்றும் ஐம்பதாயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







It's only fair to share...Share on FacebookShare on Google+Tweet about this on Twitter

Comments are closed.