February
7


போரினால் பாதிப்புற்ற தாயக உறவுகளின் ஜீவனோபாய ஆதாரத்திற்காக தொடர்ச்சியாக உழைத்துவரும் யோர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பானது சமகாலத்தில் யேர்மனியில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் தொண்டர்களின் பேராதரவுடன் சிற்றுண்டிச்சாலைகள் அமைத்து அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானங்களில் பாதிப்புற்ற உறவுகளுக்கான பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றது.

அவ்வகையில் கடந்த 04.06.2016 அன்று யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச விழாவின் போது (International Day)அமைக்கப்பட்ட சிற்றுண்டிச் சாலையில் எமது தொண்டர்கள் உற்சாகமாக செயலாற்றினர்.

இத்திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் போரினால் மிகவும் நலிவுற்ற பயனாளிகளுக்கு பின்வரும் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.அவையாவன

• கல்வி ஊக்குவிப்புக் கொடுப்பனவு.
• சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு.
• மருத்துவக் கொடுப்பனவு.
• சட்ட மூலமான தேவைகளுக்கான கொடுப்பனவு என்பவை வழங்கப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வின் பதிவுகள் சில. . . .





It's only fair to share...Share on FacebookShare on Google+Tweet about this on Twitter

Comments are closed.